திருமதி. மாதினி கீர்த்திநாதன்

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

மாதினி கீர்த்திநாதன்

தோற்றம்: 04 ஏப்ரல் 1957 - மறைவு: 26 டிசம்பர் 2023

மட்டக்களப்பு பெரிய கல்லாற்றைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மாதினி கீர்த்திநாதன் அவர்கள் 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா பொன்னையா-அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற K.O.V. கதிராமத்தம்பி (ஓய்வுபெற் உப தபால் அதிபர்) - செல்லத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கதிராமத்தம்பி கீர்த்திநாதன் (முன்னாள் வீரகேசரி, தினக்குரல் முகாமையாளர்-மட்டக்களப்பு கிளை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

Dr. நர்த்தனா (மட்/போதனா வைத்தியசாலை), Eng. பிருந்தன் (Reading-PhD- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Eng. சுரேஷ் (முன்னாள் அமைச்சின் செயலாளர்), காலஞ்சென்ற செல்வி மாலினி, சுபாஷ் (சுவிஸ்), சுமணேஸ் (லண்டன்), மாதர்ஜனி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

குருநாதன், யோகநாதன், அதிஷ்டநாதன், சியாமளாதேவி, அருள்நாதன் (பிரித்தானியா), கமலநாதன் (கனடா), விமலநாதன், மஞ்சுளா, சுதர்ஷினி, தற்பரி, பிறேமன் ஆகியோரின் மைத்துனியும்,

மீரா வைஷ்னி, ருத்ரா விதுஷன், பிரயுக்‌ஷி, பிரஜீந், பிரவீனன், பிரீத்திக்கா, பிரிஷ்னு ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மோஷிக்கா, ஶ்ரீஷேகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-12-2023 வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கல்லடி உப்போடை, நொச்சிமுனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:- 

15/2, பிள்ளையார் கோவில் வீதி, கல்லடி

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2023 05:00)