திரு. மயில்வாகனம் கணபதிப்பிள்ளை
தோற்றம்: 29 அக்டோபர் 1948 - மறைவு: 26 டிசம்பர் 2024
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், Etobicoke - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் கணபதிப்பிள்ளை அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - தெய்வானைபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவி, மைத்ரேயி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜனகன், தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஓவியன், கதிரவன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, யோகேஸ்வரி, வித்தியானந்தன் மற்றும் ஈஸ்வரி, தணிகாசலம், கமலேஸ்வரி, மகேஸ்வரி, நவதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2024 மாலை 5:00 - 9:00 மணி வரையும், 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 - 7:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் புகழுடல் Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
