திரு. மயில்வாகனம் மோகநாதன்

(கொழும்பு வலய இடமாற்ற சபை உறுப்பினர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர், கொழும்பு இராமகிருஷ்ணா வித்யாலயத்தின் வணிக கல்வி ஆசிரியர்)

மயில்வாகனம் மோகநாதன்

தோற்றம்: 06 மே 1969 - மறைவு: 10 மார்ச் 2024

யாழ். துன்னாலை வடக்கை பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் மோகநாதன் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம்-பத்மாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,

கரணவாயைச் சேரந்த புஸ்பராஜா-மங்களேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ரேவதி (வர்த்தகத் திணைக்களம் - கொழும்பு) அவர்களின் அன்புக்கணவரும்,

அக்‌ஷயனின் (றோயல் கல்லூரி - கொழும்பு) ஆருயிர் தந்தையும்,

சிவராசா, தவராசா, லோகநாதன், தேவரத்தினம், செல்வராணி, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ரேனுகாந், ஷாமினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-03-2024 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் கீரிப்பல்லி வீதி, கரணவாய் கிழக்கு, கரவெட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2024 04:00)