Mr Mayilvaganam Sadachchara Shanmugatha

Mayilvaganam Sadachchara Shanmugatha

Date of Birth: 06 April 1956 - Deceased: 14 June 2024

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 ஆட்டுப்பட்டித் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ் அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம்-மங்கையர்கரசி (சிரிமா) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்- இலட்சுமியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி (விஜயா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற குணரெத்தினம் (பிரான்ஸ்), சிவலிங்கநாதன் (சிங்கன்- சுவிஸ்), அரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற லீலாவதி,செல்வராணி, காலஞ்சென்ற செளந்தரராசா,  யோகராணி, புலேந்திரராசா, ஜெயந்திரராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவாகரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சசிகரன், வினோதப்பிரியா (பிரியா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோபிகா (பிரான்ஸ்), கோகுலரமணன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரக்யா, பிரியன், சஷ்டிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-06-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணி முதல் 04.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2024 04:00)