திரு. மயில்வாகனம் ஜெயகாந்தன்
(அபிவிருத்தி உத்தியோகத்தர் - திட்டமிடல் கிளை, யாழ் மாவட்டச் செயலகம்)
தோற்றம்: 04 ஜூலை 1982 - மறைவு: 04 நவம்பர் 2026
யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 435/21 கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மயில்வாகனம் ஜெயகாந்தன் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி - மாணிக்கம், விசுவலிங்கம் - தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு பேரனும்,
அனலைதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த மயில்வாகனம் - காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு இளைய மகனும், காரைநகர் தங்கோடையைச் (பயிரிக்கூடல்) சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் (பண்டிதன்) - சௌந்தராம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
கவிதா (யாழ். மாவட்டச் செயலகம்) அவர்களின் ஆருயிர் கணவரும்,
பிரபாகரன் (நூலகர், யாழ் மாநகர சபை பொதுசன நூலகம்), மேதினி (கனடா) ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரனும்,
பிரியா (ஆசிரியை - யா/ஏழாலை மகாவித்தியாலயம்), நவீந்திரன் (கனடா), சிவறஞ்சன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜீவன், கௌசிகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜீவிகா, சிந்துஷன் ஆகியோரின் அன்புமிகு சிறிய தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பிரபாகரன்:- +94 76 610 8022
www.tamilthakaval.org
