திரு. மயில்வாகனம் கிருஷ்ணபிள்ளை

(கிருஸ்ணம் சவுன்ட்ஸ் உரிமையாளர்)

மயில்வாகனம் கிருஷ்ணபிள்ளை

தோற்றம்: 16 ஜனவரி 1945 - மறைவு: 10 அக்டோபர் 2026

அம்பாறை - பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - செல்வநாயகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மயில்வாகனம் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் - சீனியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

லீலாவதி (சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

யோகராஜா, லீலாவதி, காலஞ்சென்ற கமலாவதி, மகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ரதி, விஜி, வாணி, ஜெயா, ஜெகன் (SLPA), மதன் (சந்திரா வெதுப்பகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

அனிக்சன், ருக்சிக்கா, கீர்த்திக், கிஷாந்தி, சுதர்சன், தருணி, லக்ஷன், தர்சிக்கா, யதுநஸ்கா, கார்த்திக், விஷ்ணு, கேஷனா, கபிஷனா, அர்ஷிகா, சக்தி, அபி, சாருண்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

ஸபிக்சன், பிறைடன், பிறைசிக்கா, பிறனிக்கா, நோயல், திலோசிக்கா ஆகியோரின் பாட்டனாரும்,

அன்டனி, நெல்சன், தயா, ராஜன், ராம், அமலா, பிரார்த்தனா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று மாலை 04.00 மணியளவில் செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2026 00:00)