திரு. மயில்வாகனம் தம்பிமுத்து

மயில்வாகனம் தம்பிமுத்து

தோற்றம்: 05 ஏப்ரல் 1947 - மறைவு: 27 ஜூன் 2024

யாழ். வடமராட்சி சாரையடி புலோலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் தம்பிமுத்து அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று கனடா-Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து-இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான தவச்செல்வம்-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

கெளரி (கனடா), பானு (ஐக்கிய அமெரிக்கா), தாசன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், Doug, ராஜா, பாவனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கனகபூரணம், முத்துக்கிருஷ்னன், விக்னேஸ்வரன் மற்றும் முத்துலட்சுமி, தர்மரட்ணம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருட்செல்வி, அருந்தவராஜா, காலஞ்சென்ற சண்முகலிங்கம், அருமைத்துரை, சிவசுப்பிரமணியம், அற்புதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீனா, ரதியா, ரதீப், விஹானா, ஜனு ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 29-06-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) என்ற முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 9.30 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் Highland Hills Crematorium (1492 Woodbine Ave, Markham, ON L3R 2N6, Canada) என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2024 04:00)