திருமதி. மயில்வாகனம் அரியமலர் (அழகம்மா)
தோற்றம்: 10 அக்டோபர் 1944 - மறைவு: 19 ஜூலை 2024
யாழ். மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மயில்வாகனம் அரியமலர் அவர்கள் 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், தங்கவடிவேல், மற்றும் கிளிரூபன், பாலசிங்கம், அழகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவாக்கிளி (கனடா), காலஞ்சென்ற தேவதாஸ் (குண்டப்பா), கண்ணதாசன் (தங்கப்பழம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயதாசன் (குட்டிப்பவுன்-கனடா), சாந்தினி, நந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவாரும்,
தெய்வா, தெய்வீகா, அஸ்வினி, அயன், அரன், டினுஜா, அபீசன், அனுஸ்கா, அக்ஷயா, அஸ்வின், வராகி, சாய்சரன், கன்ஷிகா, தஷ்வின், பவதாரணி, பிருத்திகன், திபிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை வேல் வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணிக்கு புகழுடல் தகனக்கிரியைகளுக்காக மயிலிட்டி சிவன் வீதியில் அமைந்துள்ள இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
