திரு. மயூரன் பஞ்சாட்சரம்

மயூரன் பஞ்சாட்சரம்

தோற்றம்: 04 செப்டம்பர் 1981 - மறைவு: 06 ஜனவரி 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி,  Toronto- கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயூரன் பஞ்சாட்சரம் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பஞ்சாட்சரம் - செல்வகாந்தி தம்பதியினரின் அன்பு மகனும்,

நரேந்திரன், அரவிந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டுக்சிக்கா, சுஜிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அக்சரா, சாய்தேவ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அர்ஜூன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

திருக்குமார், ஜெயலஷ்மி, மகேந்திரன், தயாநிதி, மகாராணி, முருகதாஸ், சித்திராதேவி, நடேசன், சுந்தரகலா ஆகியோரின் அன்பு மருமகனும்,

சொர்ணகாந்தா, கந்தசாமி, நிர்மலா, ராமநாதன், மீனாம்பாள், தர்மகுலசிங்கம், மனோகரி, வாணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் - நாகேஸ்வரி, வேலாயுதபிள்ளை- கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

தஷாணி, திருமால், முரளிக்கிருஷ்ணா, அர்ச்சணா, கீர்த்தனா, கீர்த்திகா, கீத்தி, இந்துமதி, கெளசல்யா, மதுமதி, பரணிதரன், தரணிதரன் (கோபி), அர்வின், அனுஜன், அபர்ணா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

செந்தூரன், கார்த்திக், சங்கவி, விஷ்ணுகன், மீரா, மயூரி, பார்த்தீபன், இந்திரப்பிரசான், அஜந்தா, அஜித்தா ஆகியோரின் மைத்துனரும்,

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-01-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-01-2025 வியாழக்கிழமை காலை 8:30 - 10:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2025 05:00)