Mrs. Meenalojini Sivanesan
Date of Birth: 02 January 1944 - Deceased: 18 July 2026
நாடறிந்த சமூக சேவையாளரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான யாழ். சிதம்பரக் கல்லூரி, கிறிஸ்தவ கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் அதிபரும் டொரன்டோ கல்விச்சபை ஆலோசகருமான சின்னையா சிவனேசன் அவர்களின் ஆருயிர் துணைவியார் மீனலோஜனி சிவனேசன் அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், யாழ் வைத்தீஸ்வரர் கல்லூரி காலஞ்சென்ற கார்த்திகேசு - ஞானம்மா தம்பதிகயினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற வைத்தியர் ஜெகன்மோகன், லோகேசன், காலஞ்சென்ற நகுலேஷன், சிவனேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
எழிலினி, சிவரூபன், லாவண்யா, சஞ்சீவன் ஆகியோரின் அன்பான தாயாரும்,
ஜெயபாலன், கரோலின், பிரசாந்தன் ஆகியோரின் மாமியும்,
சிந்து ஜெயன், ஜெயசுருதி, மாதங்கி, ஆர்யா, விசாகன், கிருஷ்ணவி, விஷாலினி ஆகியோரின் அருமை அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-07-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-07-2026 புதன்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Funeral Home (384 Finley Avenue. Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சிவனேசன்:- +1 416 888 8950
www.tamilthakaval.org
