Mrs. Meenambigai Ragupathy
Date of Birth: 01 October 1964 - Deceased: 21 April 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டன், கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனாம்பிகை ரகுபதி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், Dr குணரட்ணம் - மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற உருத்திரபசுபதி - கமலாதேவி தம்பதியினரின் மருமகளும்,
ரகுபதி அவர்களின் அன்பு மனைவியும்,
சாம்பவி, வைஷ்ணவி, தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஆனந்த் அவர்களின் அன்புச் சகோதரியும்,
Oscar அவர்களின் அன்பு மாமியாரும்,
நிலா, ஈசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கலாபதி, உமாபதி, அனுசூயா, அகல்யா, கல்பனா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-04-2025 சனிக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் முற்பகல் 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
