Mrs. Menatchi Veluppillai
Date of Birth: 02 March 1927 - Deceased: 08 February 2025
யாழ். மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மன்னார் - உயிலங்குளம் 9ம் கட்டையை வசிப்பிடமாகவும், தற்போது Anna Paulowana - நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனாட்சி வேலுப்பிள்ளை அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பையா - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், சின்னத்தம்பி - சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,
தவலஷ்மி (ஓய்வுபெற்ற கூட்டுறவு பரிசோதகர்-இலங்கை), காலஞ்சென்ற பாக்கியவதி, பாலகிருஷ்ணன், இரத்தினபூபதி (ஜேர்மனி - கமநல ஆராய்ச்சி நிலையம் - ARIT இலங்கை), திலகவதி (ஆசிரியை - இலங்கை), கிருஸ்ணவானி (ஆசிரியை - நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கராஜா (இலங்கை), சிவசுந்தரம் (இலங்கை), யோகாம்பிகை (ஜேர்மனி), சிவநாதன் (ஜேர்மனி), கேதீஸ்வரன் (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யோகராணி, செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், ராசலட்சுமி, அருமைநாயகம், ஞானலட்சுமி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பெருமாள், நாகம்மா, காமாட்சி ஆகியோரின் மைத்துனியும்,
காயத்ரி (கனடா), சத்விகன் (இலங்கை), மைத்ரேமி (பல் வைத்தியர்-இலங்கை),நந்தரூபன், சசிரூபன், காலஞ்சென்ற காந்தரூபன், சிவதர்ஷனி (பிரித்தானியா), தசரதரூபன் (பிரான்ஸ்), தர்ஷன் (ஜேர்மனி), அனுஷ் (ஜேர்மனி), அஷ்வித், ஜெகனித், அபியுக்த் (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
தூயா, நேயா, சுபன், அக்சயன், அஷ்விதன், அபிஷேக், யாஷ்வின், டினுசாந், காவியா, யதுர்சனா, டிசாந், றஜிசன், ரஜிதன், ஐகிதன், தைலர், விஜயராம், பெலிக்ஸ், லக்ஷ்மன், ஜோசேவா, ஆயுஷ்மான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 மணியளவில் Crematorium Schagen (Hairinghuizwerg 3, 1741 NC Schagen Netherlands) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
