Mr. Mithukkumar Kumuthesh
(Subasri Tex - 3rd Cross Street, Colombo-11)
Date of Birth: 09 July 1986 - Deceased: 29 May 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் வடக்கு தத்தமங்களம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திரு. முத்துக்குமார் குமுதேஷ் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ந. முத்துக்குமார் (Subasri Tex) - பானுமதி தம்பதியினரின் செல்வப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை - பார்வதி அம்மாள் (கொஸ்லந்தை), K.P. செவ்வந்தியாபிள்ளை - தாயம்மாள் (தாலத்தோயா மில்லகாவத்த) தம்பதியினர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
