திரு. மோகனதாஸ் கேசவன்

மோகனதாஸ் கேசவன்

தோற்றம்: 12 டிசம்பர் 1992 - மறைவு: 02 மார்ச் 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகவும், திருகோணமலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மோகனதாஸ் கேசவன் அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், திரு. திருமதி மோனதாஸ் ரூபகௌரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான முல்லைத்தீவு ஒட்டிசுட்டானை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம்- நட்சத்திரம் தம்பதியினரின் மருமகனும்,

விஜயலக்சுமி (சுஜா) அவர்களின் அன்புக் கணவரும்,

சக்‌ஷ்வினி, விஷர்ணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜிதா (பொது சுகாதார மருத்துவ தாதி, உவர்மலை), மேனகா (ஆசிரியை - யா/குடத்தனை அ.த.க. பாடசாலை, யா/கம்பர்மலை வித்தியாலயம்), குணாளன் (யூனிலிவர் - திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பிரசாந்தன் (cargills food city manager - Lingenager), கவிச்செல்வன் (Area sales Manager Northern Province , Hutchison Telecommunication lanka (pvt) ltd) ஆகியோரின் மைத்துனரும்,

செல்வி, விஜயகுமாரி, புவனேஸ்வரி, விஜயகாந்த் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

உதயன், லீனஸ் பிரின்ஸ்டன் ஆகியோரின் சகலனும்,

மனோகரதாஸ் (வல்வெட்டித்துறை), இரத்தினேஸ்வரி தவராச (இந்தியா), மகேந்திரதாஸ் (தாளையடி), முரளிதாஸ் (Murali, construction - வல்வெட்டித்துறை), இந்திரதாஸ் (இந்திரன்), புவனேஸ்வரி (முல்லைத்தீவு) ஆகியோரின் பெறாமகனும், மருமகனும்,

காலஞ்சென்ற மகேந்திரராசா (மனையாவௌி), மகாலெட்சுமி அம்மா (மனையாவௌி), வரதராஜன் (ரவி - மனையாவௌி), காலஞ்சென்றவர்களான லிங்கராசா (லிங்கன்), ஶ்ரீகந்தாரஜா (மனையாவௌி) மற்றும் தங்கவேல் பாலேஸ்வரி (ஈஸ்வரி - சுவிஸ்), செல்வேந்திரன் (செல்வன் - சுவிஸ்) ஆகியோரின் மருமகனும், பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2024 பிற்பகல் 2.00 மணிக்கு இல-513, அன்புவதிபுரம், திருகோணமலை அவரது இல்லத்தில் நடைபெற்று, திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2024 05:00)