திரு. மூத்தாம்பி ஆனந்தகிருஷ்ணன்

(சமூகசேவகர், முன்னைநாள் அச்சுவேலி பல நோ கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் GM)

மூத்தாம்பி ஆனந்தகிருஷ்ணன்

தோற்றம்: 10 ஏப்ரல் 1935 - மறைவு: 15 ஜூன் 2025

யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.  மூத்தாம்பி ஆனந்தகிருஷ்ணன்   அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மூத்தாம்பி - மூத்தபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற நவரத்தினம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுந்தரேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தகௌரி (கௌரி - சுவிஸ்),  கௌசலா (தேனா - ஆசிரியர்),  சுதர்சினி (சுதா - ஜேர்மனி),

காலஞ்சென்ற தணிகைக்குமரன் (தனிஸ் - பிரித்தானியா ஆவரங்கால் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர் மற்றும் உப தலைவர் A N R V OSA, இலண்டன்), கமலக்குமரன் (கமா - ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழக முன்னாள் தலைவர்) ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

திவாகரன், காந்தீபன், சிவலிங்கம், சிந்து, லக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆகாஷ், அஸ்மிதா, ஆசிகா, ஆர்த்திகா, அக்‌ஷகா, நிதுன், நிகிஷா, அபினாஷ், அம்ஷரன், ஆருக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சின்னையா, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நடராஜா, பரமேஸ்வரி, புவனேஷ்வரி, பாலசரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2025 20:58)