Mr. Moses Nivethan Sathiyanathan
Date of Birth: 02 March 1988 - Deceased: 24 June 2025
யாழ். அச்செழு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மோசஸ் நிவேதன் சத்தியநாதன் அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், சத்தியநாதன் - சரோஜினி தம்பதியினரின் தவப்புதல்வனும், பாஸ்டர் ரஞ்சன் - சாந்தினி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ஜீடித் செறின் அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதிகாவின் அன்புச் சகோதரனும்,
ருக்ஷனின் மைத்துனரும்,
லியா, லிதியா ஆகியோரின் பாசமிக்க தாய்மாமனும்,
காலஞ்சென்ற ரகுநாதன், பரமானந்தம், சந்தியா கோ பத்மநாதன், பிரேம், வரதன், அம்புலிதேவி, கௌரி, வசந்தினி, சாந்தினி, சுபேந்தினி, செறின், சுகந்தினி ஆகியோரின் பெறாமகனும்,
இராசலட்சுமி, காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, பாக்கியலட்சுமி மற்றும் ரோகிணி, காலஞ்சென்ற செல்வநாயகம், ஒப்பிலாமணி, காலஞ்சென்ற யோகராஜா நைற் ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 07-07-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது அச்செழு இல்லத்தில் நடைபெற்று, சரீரம் குடும்ப சேமக்காலையான விலங்கன் கிறிஸ்தவ சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
