திரு. மு. சிவராமன் செட்டியார் (DSI)

மு. சிவராமன் செட்டியார் (DSI)

தோற்றம்: 10 செப்டம்பர் 1944 - மறைவு: 04 மே 2024

இந்தியா- ​மேலைச்சீவல்புரியைப் பிறப்பிடமாகவும், இல-820/12, காந்தி மாவத்த, ஹுணுப்பிட்டி, வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மு. சிவராமன் செட்டியார் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செட்டியார்-தெய்வானை ஆச்சி தம்பதியினரின் புதல்வரும்,

பூலாங்குறிச்சி இராமநாதன் செட்டியார்-ஜானகி ஆச்சி தம்பதியினரின் மருமகனும்,

சாவித்திரி அவர்களின் அன்புக்கணவரும்,

இராசமணி ஆச்சி, சிவகலை, லங்காதேவி, பாரதாதேவி, பழனியப்பன் ஆகியோரின் சகோதரரும்,

சொர்ணநாதன், கதிரேசன், இராஜேந்திரன், சௌந்தரராஜன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற தியாகராஜன், இராதாக்கிருஸ்ணன், கண்கப்பன், சிங்காரம், முத்துநீலா, தேவகி, கலைமணி, உமாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சண்முகம், விக்னேஷ்வரா, ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் சகலையும்,

புஸ்பராஜா (அருணா ஸ்டோா்ஸ்-நாவலப்பிட்டி), தெய்வேந்திரராஜா (நாவலப்பிட்டி) ஆகியோரின் சம்பந்தியும்,

பாலா (ஐக்கிய இராச்சியம்), துர்கா (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஷர்மிலா (ஐக்கிய இராச்சியம்), அருள்ராஜ் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் மாமனாரும்,

அக்‌ஷய், அக்‌ஷயா, டியா, டிஷாந்த் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 06-05-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, ஹூணுப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2024 04:00)