திரு. மூக்கபிள்ளை கனகரத்தினம் பிள்ளை
(ராணி ஸ்டோர்ஸ் - உரிமையாளர்)
மறைவு: 14 மே 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் சேருகுடி கிராமத்தைப் பூர்வீகமாகவும், கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மூக்காப்பிள்ளை கனகரத்தினம்பிள்ளை அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மூக்காப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் மகனும், ஊரகந்த காலஞ்சென்ற கருபண்ணாபிள்ளை - பெரியம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் கணவரும்,
காலஞ்சென்ற கனகசபை (உடுஸ்பத்துவை), சதானந்தம் (திருச்சி), நமச்சிவாயபிள்ளை (நதீகா ஜீவலரி) ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜன், ராஜேந்திரன் ஆகியோரின் மாப்பிள்ளையும்,
காலஞ்சென்றவர்களான வீ.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை (அசோகாஸ் - ஹட்டன்), சுப்பிரமணியம் (சரவணாஸ் - கண்டி), முத்தையாப்பிள்ளை (கலஹா), வெள்ளாந்துரை (தெல்தெனிய) மற்றும் பரமசிவம்பிள்ளை (ஹேவாஹெட்ட) ஆகியோரின் சம்பந்தியும்,
மகேஸ்வரன்பிள்ளை (மிலேகா ஜீவலரி - கேகாலை), ராஜேந்திரன் (சரண்யா ஜீவலரி - கேகாலை), பாஸ்கரன் (ஸ்ரீதேவி ஜீவலரி - கேகாலை), காலஞ்சென்ற ராணி (திருச்சி), திலகாவதி (ஹட்டன்), பவானி (கண்டி) ஆகியோரின் தகப்பனாரும்,
புஸ்பராஜா (திருச்சி), நாகேந்திரன் (அசோகாஸ் - ஹட்டன்), காலஞ்சென்ற கருணாகரன் (சரவணாஸ் - கண்டி), மஞ்சுளா, நேசமலர், மேகலா ஆகியோரின் மாமனாரும்,
நிஷாந்தன், சந்தோசன், சங்கேஸ், ஜானு, திரிஸ்னா ஆகியோரின் பாட்டனாரும்,
செந்தூரன், பவித்ரா, ரிஷிகரன், தக்ஷிகன், தசமி, அபினயா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் (இல-44, பன்சல வீதி, கேகாலை) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாலை 5:00 மணியளவில் கேகாலை ரம்புக்கனை தகனசாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
