Mrs. Muralitharan Ruba

Muralitharan Ruba

Date of Birth: 22 April 1970 - Deceased: 02 October 2026

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முரளிதரன் ரூபா அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவப்பிரகாசம் (ஓய்வுநிலை அதிபர்) - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற மகாலிங்கசிவம் - சௌந்தரேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

முரளிதரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர் (முன்பள்ளி), வவுனியா வடக்கு வலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

வாசவி (மாணவி, ரம்பைக்குளம் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சொரூபன், சொரூபா, ரூபன் (ஆசிரியர், வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்), சாம்பவி (ஆசிரியர், வவுனியா தரணிக்குளம் ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவநேசபாலன், யசோதரா (சுவிஸ்), வித்யா (ஆசிரியர், வவுனியா விபுலானந்தா கல்லூரி), டினேசன், கிரிதரன் (அவுஸ்திரேலியா), மதிதரன் (இலண்டன்), லதாங்கி (அபிவிருத்தி உத்தியோகத்தர் தெல்லிப்பளை பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தமிழரசி, குமணன், சனாதனி ஆகியோரின் சிறியதாயும்,

அங்கணன், அனிகா, சதுர்ப்புஜன், ஆரணன், ஆருஷன் ஆகியோரின் அன்புப் பெரியதாயும்,

காலஞ்சென்ற சுருதியன், சரணவி (சுவிஸ்), தேவகன், மதுவந்தி, மாதுமை, மதுரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

அகத்தி,அனுமித்ரா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

தன்மதி அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் தரணிக்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஈச்சங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

டினேஷன் (மைத்துனர் ):- +94 77 188 5737

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2026 00:00)