திருமதி. முருகையா நேத்திராம்பாள்

முருகையா நேத்திராம்பாள்

தோற்றம்: 19 பெப்ரவரி 1942 - மறைவு: 29 ஆகஸ்ட் 2025

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கேசாவில் வீதி (பேச்சியம்மன் கோவிலடி) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகையா நேத்திராம்பாள் அவர்கள் 29-08-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - கெளரிஅம்மை தம்பதியினரின் மூத்த மகளும்,

`காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரி, புவனேஸ்வரி, புஸ்பாஞ்சலி, ரிஷாஞ்சனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சேகரன், தெய்வகலை, சிவமயம், பிரபாகர், ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செனோராம், செச்சின், சிவரிசி, சிந்தூரி, கஜலக்சி, சுபலக்சன், வைஸ்ணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பாஸ்கரன், சிவகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கமலாதேவி, மற்றும் கிருஸ்ணராணி, இந்திராணி, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2025 திங்கட்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2025 04:00)