திரு. முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்
(முன்னாள் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி இரசாயன பௌதிகவியல் ஆசிரியர், தேசிய கடதாசி கூட்டுத்தாபனம் (National paper cooperation) நிதி முகாமையாளர், Agro Marine நிதி கட்டுப்பாட்டாளர்)
தோற்றம்: 07 மார்ச் 1937 - மறைவு: 09 மே 2026
யாழ். தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை - சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும், அம்பலவாணர் - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியவதி அவர்களின் அருமைக் கணவரும்,
பவானி, பாமினி, பவானந்தன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
நிர்மலராஜா, தேவகுமார், வினோதினி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குணரத்தினம், பரஞ்சோதி மற்றும் விஜயரத்தினம், ஜெகசோதி, பாலச்சந்திரன், ஆனந்தகுமாரசாமி, காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, பரமேஸ்வரி மற்றும் தனபாக்கியம், புஷ்பலீலா, இந்திராணி, சோதியாம்பாள், சர்வேஸ்வரி, மீனாம்பிகை, யசோதா, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,
அருண்- மீரா, அமலன், பாலகுமார்-ஐஸ்வரி, தாரணி, விக்னேஷ், விஷால் ஆகியோரின் பேரனும்,
கவி, ஆருஷி ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-05-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 14-05-2026 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதலும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
