Mr. Murugesampillai Parangsothy
(முன்னாள் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை உப அதிபர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர், இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் தரம் - I)
Date of Birth: 04 June 1947 - Deceased: 08 February 2026
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், ஆயிலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசம்பிள்ளை பரஞ்சோதி அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசம்பிள்ளை - சிவக்கொழுந்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் - சௌபாக்கியவதி தம்பதியினரின் மருமகனும்,
சோதியாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
சோதிகரன், ஸ்வர்ணசோதி, மாதங்கி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சகீலா, மதனரூபன், கௌசிகன் ஆகியோரின் மாமனாரும்,
பாலசுப்ரமணியம், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குணரட்ணம் மற்றும் விசயரத்தினம், ஜெகசோதி, பாலச்சந்திரன், ஆனந்தகுமாரசாமி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற பாக்கியவதி, புஸ்பலீலா, இந்திராணி, சர்வேஸ்வரி, மீனாம்பிகை, யசோதா, கிருஸ்ணகுமாரி, கோகிலராசா, காலஞ்சென்ற நடனாம்பாள், பரமராசா, நந்தினி, உமாதேவி, சந்திரேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
அக்ஷரன், ஆருத்திரா, ஆதிரன், ஆதர்ஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாாின் இறுதிக்கிரியைகள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரது ஆயிலி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
