Mr Murugesapillai Paransothy
(Retired Principal)
Date of Birth: 04 June 1947 - Deceased: 09 February 2026
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபர் முருகேசம்பிள்ளை பரஞ்சோதி (SLEAS) அவர்களின் மறைவு குறித்து கலாசாலைச் சமூகம் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புகழ் பூத்த அதிபர்களுள் ஒருவராக விளங்கிய மு.பரஞ்சோதி அவர்கள் 09.02.2026 அன்று அமரத்துவம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து துயருறுகின்றோம்.
04.06.1947 இல் காரைநகர் தங்கோடையில் முருகேசம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதியரின் மகனாகப் பிறந்த இவர், கணிதத்துறைப் பட்டதாரி ஆவார்.
01.07.1983 இல் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில விரிவுரையாளராக நியமனம் பெற்ற இவர் அங்கு கடமையாற்றும் போது இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்.
01.09.1991 தொடக்கம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளராகவும் 21.05.1998 தொடக்கம் 23.01.2002 வரையான காலப்பகுதியில் அதிபராகவும் அதனைத் தொடர்ந்து மீண்டும் விரிவுரையாளராகவும் பணியாற்றி 2008 இல் ஓய்வு பெற்றார்.
கலாசாலை மீது கொண்ட பற்றினால் உந்தப்பட்டு கலாசாலைச் சமூகத்தவர்களைக் காண்பதில் ஆனந்தம் கொண்டிருந்தார்.
கடந்த ஆண்டில் (12 பெப்ரவரி 2025) 2000 – 2001 கல்வியாண்டு ஆசிரிய மாணவர்கள் முன்னெடுத்த ஒன்று கூடல் நிகழ்வில் - தனது இயலாத நிலையிலும் கலாசாலையைத் தரிசிக்கும் நோக்குடன் வருகை தந்து கலாசாலை வளாகத்தைச் சுற்றிப் பார்த்ததுடன் நிகழ்வில் ஆசியுரையையும் வழங்கியிருந்தார்.
எல்லோருடனும் இன்முகத்துடன் பழகிய அன்புக்குரிய அதிபர் பரஞ்சோதி அவர்களின் ஆன்மா கலாசாலையில் கோயில் கொண்டருளும் யோகலிங்கேஸ்வர சுவாமியின் திருவடிகளை அடையப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யாழ் காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், ஆயிலியை வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகேசம்பிள்ளை பரஞ்சோதி அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசம்பிள்ளைசிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் மற்றும்சௌபாக்கியவதி தம்பதியரின் அன்பு மருமகனும்,
சோதியாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
சோதிகரன், ஸ்வர்ணசோதி, மாதங்கி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சகீலா, மதனரூபன், கௌசீகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம் காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குணரட்ணம் மற்றும் விசயரத்தினம், ஜெகசோதி, பாலச்சந்திரன், ஆனந்தகுமாரசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பாக்கியவதி, புஸ்பலீலா, இந்திராணி, சர்வேஸ்வரி, மீனாம்பிகை, யசோதா, கிருஸ்ணகுமாரி, கோகிலராசா காலஞ்சென்ற நடனாம்பாள் பரமராசா, நந்தினி, உமாதேவி, சந்திரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்ஷரன், ஆருத்திரா, ஆதிரன், ஆதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 12-02-2026ம் திகதி வியாழக்கிழமை காலை 7:00 மணியளவில் ஆயிலி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- லலீசன், குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
