Mr. Murugesu Gneswaran
Deceased: 15 February 2025
யாழ். மாவிட்டபுரம் வீணியவரையைப் பிறப்பிடமாகவும், மடத்தடி, கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு ஞானேஸ்வரன் அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு - பூதாத்தைப்பிள்ளை தம்பதியினரின் மகனும்,
அன்னபரிபூரணம் (பெற்றி ரீச்சர், முன்னாள் வலிகாமம் கல்வி வலய சேவைக்கால ஆலோசகர், முன்னாள் யாழ். மகாஜனக் கல்லூரி ஆசிரியர், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்) அவர்களின் கணவரும்,
அபர்ணா (ஆங்கில ஆசிரியர் யாழ். சீனன் கலட்டி ஞானோதயா வித்தியாலயம், யாழ். அளவெட்டி அமெரிக்கன் மிசன் வித்தியாலயம்) அவர்களின் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் (யாழ். மத்திய கல்லூரி கணித ஆசிரியர்) அவர்களின் மாமனாரும்,
ஜதுன் (மகாஜனக் கல்லூரி 11ம் ஆண்டு) அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கீரிமலை செம்பொன்வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- மனைவி
முகவரி:-
"ஜயக ஜதுனம்"
அரசடி வீதி, மாவிட்டபுரம் தெற்கு, மாவிட்டபுரம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
