Mr. Murugesu Navaratnam

Murugesu Navaratnam

Deceased: 27 February 2026

யாழ். காரைநகரைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்தவரும்  தற்போது கனடா-மார்க்கத்தில் வாழ்ந்தவருமானதிரு. முருகேசு நவரத்தினம் அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு - தங்கமுத்து இணையரின் மகனும்,

நவபாக்கியம் அவர்களின் மனைவியும்,

ரதி, ரவி, ரகு ஆகியோரின் தந்தையும்,

சிவானந்தன், சசி, அவந்திகா ஆகியோரின் மாமனாரும் ,

அருண், பிரியா, காலஞ்சென்ற வானதி,  ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 முதல் இறுதி வணக்கத்திற்காக 8911 Woodbine Avenue என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge வணக்க மண்டபத்தில் வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக் கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் 12492 Woodbine Avenue என்ற முகவரியில் அமைந்திருக்கும்  Highland Hills Crematorium தகன மண்டபத்தில் அன்னாரின் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2026 00:00)