Mr Murugesu Sinnathamby

Murugesu Sinnathamby

Deceased: 15 August 2019

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப் புதுக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்தம்பி 15.08 2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகேசு - சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சின்னமணியின் அன்புக் கணவரும்,

அமுதம்மா, காலஞ்சென்றவர்களான வள்ளிபுரம், கதிரவேலு, சிவகாமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகுமார் (பிரான்ஸ்), உதயகுமார் (ஆசிரியர், வ/ இந்துக் கல்லூரி), மணிமலர் (அமெரிக்கா), நேசமலர் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஸ்பராணி (பிரான்ஸ்), ஸ்ரீதர்சினி (ஆசிரியை, வ/ கோமரசன்குளம் மகாவித்தியாலயம்), செல்லத்துரை (அமெரிக்கா), சரோஜ்கண்ணா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

அஸ்வின் (பிரான்ஸ்), அலெக்ஸ் (பிரான்ஸ்), கயன்சிகா (அமெரிக்கா), வேனிஷா (மாணவி, வ/ இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.08.2019) திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இல. 33, சிவன்கோயில் வீதி சின்னப்புதுக்குளம், வவுனியா எனும் முகவரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வெளிக்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல.33, சிவன்கோயில் வீதி,
சின்னப்புதுக்குளம்,
வவுனியா.
இலங்கை

தகவல்: குடும்பத்தினர்.

+94 77 714 7604

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)