திரு. முருகேசு சின்னத்துரை (ஆபத்துகாரர்)
(ஓய்வுபெற்ற பிரதம சிறாப்பர் - துறைமுக அதிகாரசபை, கொழும்பு)
தோற்றம்: 17 மார்ச் 1929 - மறைவு: 09 ஜனவரி 2025
யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சின்னத்துரை அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - மாணிக்கம் (ஆபத்துக்காரர்) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலாதேவி, தயாநிதி, சிவரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருட்செல்வன், செந்தில்நாயகம், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரமேஸ் – ஜாயினி, அனிதா – இளங்குமரன், துர்க்கா- கலைச்செல்வன், திவ்யா, சயந்தன், விதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மலீனா, கிஸான், எலயாஸ், நேலன், தர்ஸன், லோகிதன், கார்த்திகன், ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான கண்மணிராசா, செல்லம்மா, சிவகாமசுந்தரி, சிவபாதசுந்தரம், தங்கம்மா, சிவசம்பு, மனோன்மணி, பொன்னம்மா, காசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, திருநாவுக்கரசு, அம்பலவாணர், மீனாட்சி, கணபதிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், பரமசாமி, புவனேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 8:00 மணி வரையும், 13-01-2025 திங்கட்கிழமை முற்பகல் 11:30 - 12:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
