Mr. Murugesu Thirukkoneswaralingam
Date of Birth: 25 October 1961 - Deceased: 14 March 2023
யாழ் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு திருக்கோணேஸ்வரலிங்கம் அவர்கள் 14-03-2023ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவன் திருப்பதாம் ஏகினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு நாகேஸ்வரி தம்பதிகளின் ஏகபுத்திரனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமா அவர்களின் ஆரூயிர் கணவரும்,
கஜேந்தினி (மிதுனா), வெக்ஷலன் (ராம்), தயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரகலாதன் (பிரபா), மரின் ஆகியோரின் மாமனாரும்,
வனிஷ்கா, கியூசன், ஜெனுஷன், ஆலியா, ஆவிஷா, ஆஸ்லி, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரம் 18-03-2023ம் திகதி சனிக்கிழமை அன்று Rue Gince, Montreal, QC,H4N 1J7 இல் அமைந்துள்ள Aeterna Funeral Home இல் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 19-03-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2023 01:45)
