திரு. முருகேசு உருத்திரன்
(Retired Accountant, Dean – School of Business and Management Studies, Nigeria)
தோற்றம்: 12 ஜூலை 1939 - மறைவு: 11 ஜூலை 2021
யாழ். காளிகோவிலடி மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அபயகுட்டா நைஜீரியா, அவுஸ்திரேலியா கன்பெறா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு உருத்திரன் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கன்பெறா அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, வல்லிபுரம், ரத்தினம், நேசபூபதி, செல்வலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசுதாசன், ஸ்ரீரவி, பாலமுரளி, செந்தில்தாசன், காலஞ்சென்ற துளசிதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவிகா, ரேணுகா, சுதாயினி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஜா, ஜனனி, டானியல், நிலானி, மைக்கல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2021 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியா கன்பெறாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
