Mr. Murugesu Vijayamohan

Murugesu Vijayamohan

Date of Birth: 08 September 1956 - Deceased: 05 September 2025

யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு விஜயமோகன் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு -அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி - மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

லலிதகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகன் (MLT - Green Hospital, Manipay) அவர்களின் அன்புத் தந்தையும்,

சிவயோகம் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற லோகராணி, பத்மாவதி, சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2025 04:00)