Mr. Murukaiya Sivanesan

(முகாமையாளர்- சவிதாஸ் / மலரவன் புடவையகம்-கிளிநொச்சி கந்தசிவாமி கோவில்)

Murukaiya Sivanesan

Deceased: 28 July 2024

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகையா சிவநேசன் அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகையா-இரத்தினம்மா தம்பதியினரின் அருமை மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை-மனோன்மணி தம்பதியினரின் மருமகனும்,
 
காலஞ்சென்ற அகிலாண்டநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
 
அனோஜா, அனோஜன், மலரவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
ஆரூரனின் அன்பு மாமனாரும்,
 
செழியனின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்ற சறோஜினிதேவி மற்றும் சுகுணாதேவி, குகநேசன் (நோர்வே), காலஞ்சென்ற கௌசலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
அம்பிகாதேவி, திருஞானசெல்வம், சிவஞானசோதி (சுவிஸ்), திரிபுரநாதன் (சுவிஸ்), அமிர்தகலைவாணி, அரியமலர் (லண்டன்), கதிர்காமலிங்கம் (லண்டன்), காலஞ்சென்ற திருச்செந்தூர்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
முகவரி:-
காரைக்கால் சிவன் கோவிலடி,
இணுவில் கிழக்கு, இணுவில்.
 
தகவல்:-
குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/07/2024 04:00)