திரு. முருகேசு ரகுபாலன்
மறைவு: 25 மார்ச் 2026
யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்து - சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு ரகுபாலன் அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு (VT முருகேசு) - அன்னம் தம்பதியினரின் மூன்றாவது மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை - தனலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,
ராதா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற துளசினியின் தந்தையும்,
கலாவதி, தனபாலன் (இலண்டன்), வசந்தி (இலண்டன்), காலஞ்சென்ற பானுமதி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
