திரு. முத்தையா தர்மலிங்கம் தேவர்
(முன்னாள் இலங்கை மத்திய வங்கி அதிகாரி)
தோற்றம்: 19 அக்டோபர் 1930 - மறைவு: 04 ஜூலை 2025
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. முத்தையா தர்மலிங்கம் தேவர் அவர்கள் 04-07-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஶ்ரீதரன், மஹீதரன், ஶ்ரீஹரன், ஶ்ரீப்ரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லக்ஷ்மி, நிஷாந்தினி, அம்பிகா, உதயசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யஷ்மிதா, ஷம்ரிதா, அபிஷேக், மிருதுளா, அனன்யா, அக்ஷகன், தியன், திலன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-07-2025 புதன்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
