திரு. முத்தையாபிள்ளை ராமநாதன்

முத்தையாபிள்ளை ராமநாதன்

தோற்றம்: 28 டிசம்பர் 1955 - மறைவு: 03 செப்டம்பர் 2025

கொழும்பைச் சேர்ந்த திரு. முத்தையாபிள்ளை ராமநாதன் அவர்கள் 03-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இந்தியா - திருச்சி மாவட்டம் ஓமந்தூர் கிராமம் சமயமந்திரி கோத்திரம் காலஞ்சென்ற முத்தையாபிள்ளை - தனபாக்கியம் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை - தனலக்ஸ்மி தம்பதியினரின் மருமகனும்,

தமிழ்ச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

தினுஷாந்தின் (கனடா) பாசமிகு தந்தையும்,

ராஜமணி (ஜெயலக்ஸ்மி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (நித்தியகல்யாணி ஜீவலர்ஸ் - வெள்ளவத்தை) ஆகியோரின் அன்புத் தம்பியும்,

காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளையின் மச்சானும்,

ஜானகியின் கொழுந்தனாரும்,

பிருந்தாவின் (கனடா) மாமனாரும்,

செந்தில்ராஜா - கங்காகுமாரி (கல்கிசை) ஆகியோரின் சம்பந்தியும்,

சேகர், மோகனசுந்தரம், தமிழ்கொடி, மகேஸ்வரி, ரஞ்சிதா ஆகியோரின் மைத்துனரும்,

கந்தசாமி, புஸ்பராஜ், காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் சகலையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-09-2025 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:15 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:15 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2025 04:00)