திரு முதலித்தம்பி சிவசுப்பிரமணியம்

((அப்பர் - முன்னாள்,கரைச்சி தெற்கு ப.நோ.கூ.ச. கிளை முகாமையாளர்)

முதலித்தம்பி சிவசுப்பிரமணியம்

மறைவு: 15 நவம்பர் 2019

யாழ்ப்பாணம். மூளாயைப் பிறப்பிடமாகவும் இல.722. சிவிக்சென்ரர் வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட முதலித்தம்பி சிவசுப்பிரமணியம் (அப்பர் - முன்னாள் கரைச்சி தெற்கு ப.நோ.கூ.ச. கிளை முகாமையாளர்) 15.11.2019 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு.திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாயாதேவியின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீரஞ்சித மலர், (உபஅதிபர் - கிளி/இராமநாதபுரம் ம.வி), பவானந்தன் ஆசிரியர் - யா/ செங்குந்த இந்துக்கல்லூரி), பவானி (மருந்தகவியலாளர்,  தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை), ஜெயந்தினி (ஆசிரியர், மு/ கள்ளப்பாடு அ.த.க. பாடசாலை), சிவானந்தன் (அரச ஒப்பந்ததாரர், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சதாசிவன், சோமசுந்தரர் ஆகியோரின் சகோதரனும்,

இளங்குமரன் (அரச ஒப்பந்ததாரர்), குமுதினி, உதயகுமார், சுதந்திரன் (அதிபர்) ஆகியோரின் மாமனாரும்,

பகிரதன், கவின், யஸ்வினி, மதுசாயினி, கோபிசன், பவிஷன், தர்மிகன், டர்ஷாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

தவராசா, ஆனந்தராசா, சறோஜா, செல்வராசா, சந்திரராசா, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.11.2019) ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பன்னங்கண்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

722, சிவிக்சென்ரர்,
வட்டக்கச்சி, கிளிநொச்சி

தகவல்: குடும்பத்தினர் 
 
+94 77 886 2524

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2019 04:25)