Mrs. Muthathambi Saraswathy

Muthathambi Saraswathy

Date of Birth: 25 September 1930 - Deceased: 06 June 2026

யாழ். சுன்னாகம், கதிரமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. மூத்ததம்பி சரஸ்வதி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - சின்னாச்சிபிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற மூத்ததம்பி (அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணதேவி, சஷ்டிவரதன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சண்முகவரதன், சக்திவரதன் (ஜேர்மனி), சந்திரிக்கா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானேஸ்வரன், நிறஞ்சனி (பிரான்ஸ்), சுதர்சினி (ஜேர்மனி), அருளார் அகிலன் (சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற கதிரேசபிள்ளை, முத்துகுமாரு, கனகமணி, சுப்பிரமணியம், ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் தங்கையும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கத்தின் பாசமிகு அக்காவும்,

நிமல், அர்சிகா (குடும்பநல உத்தியோகத்தர்), அர்யுன் (துர்க்கா மோட்டோஸ்), அபியங்கா (தாதிய உத்தியோகத்தர்). கீர்த்தனன் - பிரகாஷிகா (பிரான்ஸ்), ஆரணி. அபர்ணா, அனித்தா, அக்சயன் (ஜேர்மனி), அபிராம் - கேதா (சுவிஸ்), அக்சயன் (சுவிஸ்) ஆகியோரின் பேத்தியும்,

சங்கேத், சாயிதக்சக்ஷனா. ஹரிஸ்ஆகாஸ், ஆயுஷன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் இணுவில் கிழக்கு, பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 804 7597

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2026 00:00)