திரு. முத்தையா துரைராசா

(இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஓய்வு பெற்ற ஊழியர்)

முத்தையா துரைராசா

தோற்றம்: 03 மார்ச் 1941 - மறைவு: 29 செப்டம்பர் 2021

யாழ் நெடுந்தீவு மேற்கை பிற்ப்பிடமாகவும், 10/ 3,திருவையாறு, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஓய்வு பெற்ற ஊழியர் , மற்றும் கிளிநொச்சி மூத்த குடிமக்களில் ஒருவரும் ஆகிய திரு.முத்தையா துரைராசா அவர்கள் 29-09-2021ம் திகதி புதன்கிழமை இன்று  இறைபதம் அடைந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா  பார்வதி தம்பதியரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற செல்லம்மாவின் பாசமிகு கணவரும்,
 
கௌரி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் (பிள்ளையார்), யுகேந்திரன் (இந்திரன், நாதஸ்வரம் கலைஞர்), டெசிகரன் (டெசி, முன்னாள்,  UNOPS, World Vision Lanka தொழில் நுட்ப உத்தியோகத்தர்), பாலசுப்பிரமணியம் (பாலன்), காலஞ்சென்ற தயாரூபன் (தயா), கோபிநாத் (MAS Kreeda Vaanavil Supervisor ) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
 
கனகசபை (ஓய்புபெற்ற நீர்பாசன திணைக்கள ஊழியர்), வசந்தி, அஜந்தா, சுகந்தி, விஜிதா, வனிதா ஆகியோரின் அன்பு மாமாவும்,
 
க.அகலியன் (தனேஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் (விளையாட்டு) மாவட்ட செயலகம், வவுனியா), க.அமலன்(குனேஸ்), க.கட்சன் (கிழக்கு பல்கலைக்கழகம் நுண்கலைப் பீட  இறுதியாண்டு மாணவன்), க.அரன்சிகா, க.சரன்சி (உயர்தரம் விஞ்ஞானப் பிரிவு,கிளிநொச்சி ம.வி), வி.தருஷனா (உயர்தரம் கணிதப்பிரிவு,கிளிநொச்சி ம.வி), வி.மதுஷன், வி,பிரவிந்த் (கிளி/ பிமந்தனாறு ம.வி), யு.ஷாருஹா (விஞ்ஞானப் பிரிவு கிளிநொச்சிம.வி), யு.தினோஜன் (யாழ்/ இளவாலை கென்றி அரசர் ம.வி.  Technologyபிரிவு), யு.சாரங்கன்(கிளி/ திருவையாறு ம.வி), டெ. சங்கவி, டெ. திஹான், டெ. யவிஷ்னவி(கிளிநொச்சி ம.வி), டெ. சங்கஜன், பா.கிருபனா, பா. பிருதுவி(கிளி,திருவையாறு ம.வி), பா.ஷஹானன், பா.டனுசிஜா  ஆகியோரின் பேரனும்,
 
அகலியன்- ஜெனோபா (அபிவிருத்தி உத்தியோகத்தர்,  APC உடையார்கட்டு) அவர்களது பேரனும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

10/ 3, திருவையாறு, கிளிநொச்சி

 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2021 09:45)