திரு. முத்தையா விருத்தாசலம் (கிச்சி)
தோற்றம்: 23 அக்டோபர் 1952 - மறைவு: 19 டிசம்பர் 2021
யாழ். வதிரி தோலியோடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா விருத்தாசலம் அவர்கள் 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜெய்கரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கிருசாந்தி விருத்தாசலம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கிருஸ்ணன், வினொலன் (வினி), காளி, கீரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிஷா கிருஸ்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை (அரசு), பத்மாவதி (ராணி) மற்றும் சண்முகராஜா (அப்பர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், குணசிங்கம் மற்றும் கிருஸ்ணவேணி(வேணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலாகரன் (கண்ணன்), கிருபாம்பிகை (வாணி), கெங்காதரன் (அரவிந்தன்), காலஞ்சென்ற கமலசேகரன் (முரளி), கனகாம்பிகை (பாப்பா), அரன் மற்றும் ஆயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யதுகுலன் (வண்ணன்), யதுமித்திரன் (வர்மன்) மற்றும் யதுமுகன் (குட்டி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
