திரு. முத்தையா சிவநேசன்

(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்)

முத்தையா சிவநேசன்

தோற்றம்: 17 ஜூலை 1950 - மறைவு: 13 ஜூன் 2025

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா சிவநேசன் அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு முத்தையா - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், இராமலிங்கம் இராமநாதன் - கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா, செல்வமலர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் ஆசைக் கணவரும்,

காலஞ்சென்ற சிவசிதம்பரப்பிள்ளை, சிவமூர்த்தி (கற்சிலைமடு), சிவசுப்பிரமணியம் (கற்சிலைமடு), இராசேஸ்வரி (கற்சிலைமடு), இரத்தினேஸ்வரி (கரங்கங்குத்தி),  தனபாலசிங்கம் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌசிகா (இலண்டன்), சுகிர்தா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு), சசிகரன் (இலண்டன்), தர்சன் (இலண்டன்), கோபிகா (முகாமைத்துவ உத்தியோகத்தர் - மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜசேகர் (இலண்டன்), ஜோதிபிரகாஷ் (ஆசிரியர் - புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி), சம்யா (இலண்டன்), ஆதவன் (சித்த ஆயுர்வேத மருத்துவர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஷா, சஞ்சய், அனுஷா, அம்சவி, அஜய், நிலன், ஆத்மிகா, ஆரத்தியா ஆகியோரின் பாசமிக்க பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பேராறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2025 04:00)