Mr. Muththaiya Gunaratnam
Deceased: 05 October 2025
யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா குணரெத்தினம் அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், தம்பாப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷினி (இலண்டன்), மகிந்தன் (சுவிடன்), கல்ப்பனா (கனடா), ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, சத்தியபாமா, நாகராசா, நல்லையா, புஸ்பராணி, ருக்குமணி, சோமலிங்கம், இந்திராதேவி, பாலராஜா, புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயராஜா, ரவீந்திரன், சங்கீதா, மஞ்சுளா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகவி, கோசலன், ஜெசிகன், கெவன், அமலியா, சியாந், கிசாந், டிலக்ஷன், நிதுஷன், விதுஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல-11/3, விவசாய கந்தோர் ஓழுங்கை,
முத்திரைச் சந்தி, நல்லூர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
