Mr. Muththaiya Thangavelayutham

Muththaiya Thangavelayutham

Deceased: 04 October 2025

யாழ். சங்கானை அம்பிகாவத்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா தங்கவேலாயுதம் அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சம்பந்தர் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ரூபசீலன் (ஆசிரியர் - யாழ். இந்துக்கல்லூரி), பிருந்தாகரன் (பிரதேச செயலர் - கண்டாவளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஞானரத்தினம் அவர்களின் அன்பு சகோதரனும்,

சங்கீதா (ஆசிரியை - முத்துத்தம்பி மகாவித்தியாலயம் திருநெல்வேலி), சியானி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜயமிதா, கோபிகன், ஆகர்ஷா, ஆதர்சனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் அவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2025 04:00)