திரு முத்தையாப்பிள்ளை கிருபானந்தன்

முத்தையாப்பிள்ளை கிருபானந்தன்

மறைவு: 25 ஆகஸ்ட் 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் சேறுகுடி கிராமம் குருவலுடையான் கோத்திரத்தை சேர்ந்த  திரு. முத்தையாப்பிள்ளை கிருபானந்தன் அவர்கள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராகலை முத்தையாப்பிள்ளை - ராஜாம்பாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற ஏகாம்பரம்பிள்ளை - தைலம்மை தம்பதியினரின் மருமகனும்,

சசி அவர்களின் அன்புக் கணவரும்,

வெங்கடேஸ்வரன், சத்தியா (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மனோஜ் (அமெரிக்கா) அவர்களின் மாமனாரும்,

ஜெகநாதன் (வத்துகாமம்), கோபாலகிருஷ்ணன் (கொழும்பு) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

சரோஜா (கண்டி), அருணா (திருச்சி), கனகா (திருச்சி), சுந்தரி (பதுளை) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தீனதயாளன் (பேரகலை) மற்றும் சத்தியமூர்த்தி, வனிதா, சீதாலெட்சுமி (கிருலப்பனை) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, வேணி ஆகியோரின் கொழுந்தனாரும்,

சிவஞானம் (கிருலப்பனை) அவர்களின் மைத்துனரும்,

கருப்பையாபிள்ளை (கண்டி), LIC சுந்தரமூர்த்தி (திருச்சி), காலஞ்சென்ற செல்வராஜ் (திருச்சி), சுந்தரலிங்கம் (Victoriya Agency - பதுளை) ஆகியோரின் சகலையும்,

வீரப்பாபிள்ளை (கண்டி) - சரோஜா ஆகியோரின் சம்பந்தியும்,

சாத்வி, துளசி ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-08-2026 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மனைவி,மகன்: +94 77 564 2763
சத்தியமூர்த்தி(சகோதரர்):+94 77 780 8038

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2026 00:00)