Mr. Muththaiyappillai Ramachandra
Date of Birth: 15 June 1945 - Deceased: 20 June 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையாபிள்ளை இராமச்சந்திரா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், முத்தையாபிள்ளை - மகாலச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
குமாரசாமி - சிவயோகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரஷாந் (பிரித்தானியா), தர்ஷாந் (கனடா), தர்ஷாந்தி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி, ஒன்றே ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வடிவாம்பிகை (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, ராதாகிருஷ்ணன் மற்றும் சரோஜினி, நடராஜா, பாலசந்திரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன் (வைத்தியர் - அவுஸ்திரேலியா), விஜயநாதன் (சட்டத்தரணி) மற்றும் தேசபந்து, யசோதரா, அமன்ரா, கீதா, கனகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபனா, ரோஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-06-2025 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், 26-06-2025 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
