திரு. மூத்ததம்பி இந்திரசித்து

மூத்ததம்பி இந்திரசித்து

தோற்றம்: 07 ஜூலை 1933 - மறைவு: 16 செப்டம்பர் 2024

யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியை பிறப்பிடவாகவும், வவுனியா பண்டாரிக்குளம் குளோப் மில் வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மூத்ததம்பி இந்திரசித்து அவர்கள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி-லட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும்,

காலம்சென்ற செல்லதுரை-கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும், 

பாக்யவதி அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்றவர்களான நல்லமுத்து, அன்னமுத்து, சித்ரசேனர் (ஓய்வு பெற்ற பிரதம தபால் அதிபர்), வீமராசா (ஓய்வு பெற்ற கணக்காய்வாளர்) மற்றும் செல்லமுத்து,  செல்வராசா, தேவராசா, பரராசா (லண்டன்), தர்மராசா (ஓய்வு பெற்ற கப்பல் பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயச்சந்திரன் (பஹ்ரைன்), ஜெயபாலன் (பிரான்ஸ்), யசோதரா (யசோ அழகு நிலையம் - வவுனியா), செந்தாமரை செல்வி (பெல்ஜியம்), கிருபைமலர் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமாரிசாரதா, பவானி, காலஞ்சென்ற லோகநாதன்,  கனகசபை, ஸ்ரீஸ்கந்தாராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், செல்வரட்ணம் (ஓய்வுபெற்ற தலைமை நீர்ப்பாசன பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தனுரா (பான் ஏசியா வங்கி), ஜெயவித்யா (கனடா), கபிலன்,  ஜெசிக்கா, வித்தகன், விபுஷா, ரூபிகா, தாரணி, அவிநாஷ், அஷ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-09-2024 புதன்கிழமை காலை 8.00 மணியளவில் அம்மன் கோட்டம் வீதி,  பண்டாரிகுளத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தட்சநாதன்குளம் இந்து மயானதில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றர் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்.

 தகவல்:- குடும்பத்தினர் ‎

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2024 04:00)