திரு. லயன் மூத்ததம்பி கனகரத்தினம் B.Com
(ஓய்வுபெற்ற பிரதி திட்டமிடல் பணிப்பாளர் - மாவட்டச் செயலகம் , மன்னார்)
மறைவு: 28 டிசம்பர் 2024
யாழ். பலாலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. 'லயன்’ மூத்ததம்பி கனகரத்தினம் அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி - இளையபிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி (தலைமை ஆசிரியர்) - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி (பிரதி அதிபர், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
இளங்கோவன் (வைத்தியர்- UK), வரதன், அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கவிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், நவரத்தினம், தெய்வானைப்பிள்ளை, தங்கம், இராசு, இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயவேல், ஜெயராம், கபீஷன், கபீஷிகா ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்ற சண்முகராசா அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2024 ஞாயிற்றுக் கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நண்பகல் 12.00 மணியளவில் கோப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
“சரஸ்வதிவாசா”
மகிழடி வீதி,
கோப்பாய் வடக்கு.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
