திரு. முத்துக்கருப்பன் சின்னையா

முத்துக்கருப்பன் சின்னையா

தோற்றம்: 30 நவம்பர் 1950 - மறைவு: 09 ஆகஸ்ட் 2025

நுவரெலியா - பீட்ரு தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லிந்துலை லெம்லியர் மற்றும் கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்கருப்பன் சின்னையா அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா - மாலையம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமசாமி - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணி, அள்ளமுத்து, ஆறுமுகம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சஷ்டிகுமார், இலங்கேதீஸ்வரன், சியாம், யாழினி, காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகேஸ்வரி, கலைசெல்வி, கலா, டிலானி ஆகியோரின் மாமனாரும்,

டில்சான், டிலுக்‌ஷி, ரக்சனா, சஸ்மிதா, டக்‌ஷிகா, பிரதீசன், சாகித்யா, ஹரின், டேஷான், யஷ்வின், மெதுஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-27/12, முதலாம் தெரு, பள்ளியாவத்தை, வத்தளை வின்டகாடனில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-08-2025 திஙங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் உடலம் கெரவலப்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2025 04:00)