Mr. Muthu Gunabalasingam
Date of Birth: 09 August 1943 - Deceased: 27 February 2026
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா - Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குணபாலசிங்கம் முத்து அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், ஐயாத்துரை - கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபன், விபுலா, கவிதா, காலஞ்சென்றவர்களான லலிதா, குகதாஸ், மயூரன், அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவானி, சிங்காரவேல், பாபு, உஷா, லோபனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிஷா, நிரேஸ், நிதர்சன், றுசானா, ஜெசன், றக்ஷிகா, திலக்ஷன், தாமிரா, ஆகாஷ், டியா, விகான், அலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-03-2026 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும்,08-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,இறுதிக்கிரியைகள் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
