Mr. Muthukkumaru Sunthareswaran
(Retired Accountant)
Deceased: 06 October 2026
யாழ். சரசாலையில் பிறந்து, பின்னர் கொழும்பில் வசித்து, இறுதியாக ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து வந்த திரு. முத்துக்குமாரு சுந்தரேஸ்வரன் அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று அமைதியாக இயற்கை எய்தினார்.
அன்னார், சரசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு (ஆசிரியர்) - வேதநாயகி தம்பதியினரின் அன்புக்குரிய மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கசாமி (இலங்கை வங்கி) - பார்வதி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஷினி, நிஷாந்தன், Dr. றொமேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சைமன், இஷானி, சாரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சதானந்தன் (கொழும்பு), சித்தானந்தன் (கொழும்பு) ஆகியோரின் மூத்த சகோதரரும்,
சிவராஜா (இலண்டன்), சிவகுமார் (அமெரிக்கா), அருந்ததி (அவுஸ்திரேலியா), இந்திரா (கொழும்பு), கௌரி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும்,
கிறிஸ்தோபர், அனா, அரலியா, சோபியா, அலீசா, ஜாஸ்மின், அம்பர் ஆகியோரின் பாசமிகு பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-10-2026 வியாழக்கிழமை நண்பகல் 12:30 - 1:30 மணி வரை Great Hollands Pavilion Hall (South Road, Bracknell, Wokingham, RG40 3EE) இல் நடைபெற்று, பிற்பகல் 2:30 - 3:30 மணி வரை Easthampstead Park Crematorium (South Road, Bracknell, Wokingham, RG40 3DW) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
