திரு. முத்துக்குமாரு சுந்தரேஸ்வரன்

(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் - ஊர்காவற்துறை)

முத்துக்குமாரு சுந்தரேஸ்வரன்

தோற்றம்: 28 ஜூலை 1952 - மறைவு: 29 செப்டம்பர் 2026

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துக்குமாரு சுந்தரேஸ்வரன் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரியாரி முத்துக்குமாரு - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மஞ்சுளா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஞானசவுந்தரம்மா, கனகலிங்கம், செவ்வந்தியம்மா, சரோஜினிதேவி ஆகியோரின் சகோதரரும்,

கிரிஜா, சுகிர்தா ஆகியோரின் அன்பு அப்பாவும்,

கௌரிசங்கர், வாகீசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஏவான், யன், சன், ஜோவான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ராஜரட்ணம், ஜெத்துரூட், கந்தையா, கனகசபை ஆகியோரின் மைத்துனரும்,

சிவராஜா, மனோகரா, யோகதாஸ், மாலினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-10-2026 வெள்ளி மற்றும் 03-10-2026 சனிக்கிழமை பிற்பகல் 15:00 - 17:00 மணி வரை Carrefour Jean Moulin (94190 Villeneuve Saint Georges) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-10-2026 திங்கட்கிழமை காலை 9:00 - 11:30 மணி வரை Carrefour Jean Moulin (94190 Villeneuve Saint Georges) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் Crématorium de Cimetière Inter-communal de Valenton (13 avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2026 00:00)