திரு. முத்துக்குமாரு மோகனகுமாரு(மோகன்)
தோற்றம்: 29 நவம்பர் 1972 - மறைவு: 24 ஆகஸ்ட் 2021
யாழ் சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் தற்போது சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முத்துக்குமாரு மோகனகுமாரு (மோகன்) அவர்கள் 24-08-2021ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தானையா பொன்னம்மா (சிறுப்பிட்டி) தம்பதியரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு கமலாதேவி தம்பதியரின் அன்பு மகனும்,
விஜயரத்தினம் சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும்,
மிதுலாவின் அன்புக் கணவரும்,
டயசாந்தியின் (கனடா) அன்புச் சகோதரனும்,
ஆறுமுகம், பாலசுப்பிரமணியம் (சுன்னாகம்), நடராசா (சிறுப்பிட்டி), சிவசுப்பிரமணியம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
தவமணி (நியூஸ்லாந்து), காலஞ்சென்ற சின்னப்பிள்ளை, சரஸ்வதி (சுன்னாகம்) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 26-08-2021ம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
சுன்னாகம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2021 00:56)
